என்று முடியும் இந்த வாழ்க்கை?
Tech help
Friday, May 15, 2026
Wednesday, May 6, 2026
வருகிறேன்!!!
எத்தனை தோழர்கள்
இருந்தாலும்
என் மனம் விட்டு பேச
ஆழ் மனது ஆசைகைளை
ஒலிவின்றி கூற
ஒரு தோழியிடமே முடியும்!
கல்லூரி காலத்தில்
விட்டு சென்ற ஒருத்திக்காக
நான் இழந்தவை ஏராளம்!
மீண்டும் அப்படி ஒரு இழப்பு
வேண்டாமென்று நான்
தேர்தெடுத்தவள் என் மனைவி!
நான் புதியவனாக இருந்தபொழுது
என் ஆசைகளே அவளது என்றாள்!
இன்றோ எல்லாம் இழந்த
பழைய காதிதமாய் நான்!
என் எண்ணங்கள் என்னவென்று
கூட அறிய ஆசைப்படாத அவள்!
என்ன ஆனாலும் மீண்டு வருவேன்
என்ற நான் இனி நான் ஏன்
வாழ வேண்டும் என்ற நிலையில்!
மனைவியாக அவள் வென்று விட்டாள்!
என் உயிரை கொன்று
தோற்றுவிட்ட நான்!
என் மகள் ஒன்றை தவிர
நான் வாழ எவ்வித
பிடிப்பும் இல்லை.
நான் இல்லா வாழ்க்கையை
அவள் பழகிவிடுவாள்
என்ற நம்பிக்கையில்
மரணத்தை நோக்கி நான்!!!!
இருண்ட இவ்வுலகம்
தொலைவில் அலைக்கும் வெளிச்சம்!!!!
Friday, May 24, 2024
உளறல்!
ஒவ்வொரு மனிதனுக்கும் மறுபக்கம் இருக்கும்.
என்னுடைய மறுபக்கம்
அளவற்ற காமம் கொண்ட கையாலகதவன்.
என்னையும் எனது எண்ணங்களையும்
பகிர்ந்து கொள்ள எனக்கு
கிடைத்த ஒரே நம்புககையான உயிர் எனது மனைவி நீ!!!
சில வருடங்கள் என்னில் பாதியாய்
என் என்னங்களை புரிந்து
என்னுள் இருந்த நீ
இன்று எங்கே போனாய்.
மனம் விட்டு பேச அழ
ஆயிரம் எண்ணங்கள்!!!!
பேசும் முன்பே தவிர்த்து விட்டு
சென்று விட்டாய்😭😭😭
வார்தைகளாய் வர வேண்டிய
வலிகள் இப்போது கண்ணீராய்!!!
என் எண்ணங்களையும்
வலிகளையும், தனிமையும்
சொல்லி அழ ஆள் இல்லாத
தனி மரமாய் உன் கணவன்!!!
மீண்டும் மீண்டும் தனிமையுடன்
போராட்டம்!!!!!!
என் அருகில் நீ இருந்தும் அன்பே!!!!!
Thursday, December 28, 2023
உண்மையின் வலி!!!!
ஒருவருக்கு உண்மையாய் இருப்பது எங்வளவு கடினம் என்பது உண்மையாய் இருந்து பார்த்தால் மட்டுமே தெரியும்.
உன்னிடம் உன்மையாக இருந்தேன் எதை இழந்தாலும் நீ போதுமென.
இன்று உன்னையும் இழந்து தனிமரமானதாய் ஒரு விரக்தி!!!
யாரிடம் சொல்லி அழ என் தனிமையை!!!!!
மீண்டும் தனிமையுடம் ஒரு போராட்டம்!!!!!
Tuesday, December 26, 2023
கனவிலும் நீ...
இன்று லோட்டஸ் மருத்துவமனையில்
நேற்று என் பிரியா மீண்டும் வருவாள் என்ற நம்பிக்கையை முற்றிலும் இழந்தேன்.
நேற்று இரவே வந்தாள் என் கனவில் என் ஆசை மகளுடன் இரு வேறு கனவுகளில்.
முதல் கனவில் என் ஆண்மையின் எழுச்சியை கண்டு ஆறு நாட்களில் எப்படி இந்த மாற்றமெற்று ஆசையாய் வருடினாள்.
இரண்டாம் கனவில் நான் அவளுடைய செல்பேசியில் அழைக்க மறுமுனையில் அவளும் என் மகளும் சேர்ந்து பாடிய பத்தி பாடல் அழைப்பிசையாய்... மெய்மறந்தேன் அன்பே!!!!
=====================================================
என் காதலின் அர்த்தம்.
நான் இவ்வளவு நாட்களாக சிவப்பு மஞ்சள் பச்சை படம் பார்க்கவில்லை. உன்னோடு நேற்றைக்கு முன் தினம் தான் மருத்துவமனை தொலைக்காட்சியில் பார்த்தேன்.
அதில் சித்தார்த் தான் ஏன் திருமணம் செய்ய விரும்பறேன் என்றொரு காரணத்தை கூறுவார். அதை கேட்ட தருணம் நீ தொலைக்காட்சியை பார்க்க நான் உண்னை பார்த்து அழுதேன்...
அந்த காரணம்:
என் வாழ்க்கையில் யாரை நம்புவது என்று தெரியாது. எனவே நான் முழுவதுமாய் நம்பி என் வாழ்க்கையையும் நிகழ்வுகளையும் தினமும் 100% பகிர்ந்து கொள்ள ஒரு துணை வேண்டும்.
பிரியா நானும் உன்னை அப்படி என்னித்தானே கரம் பிடித்தேன். என் மனதில் தோன்றிய அனைத்தையும் பகிர்ந்து மகிழ்ந்தேன். ஆனால் இன்று என்னை அனாதையாக விட்டுவிட்டாய்... அதோ இங்கே புலம்பி உள்ள அத்தனையும் உன்னிடம் சொல்லி அழ ஆசை. ஆனால் சில வஞ்சகர்கள் உன்னை என்னிடம் இருந்து பிரித்து விட்டனர். இப்போது உடனிருப்பது என் மனைவி பிரியா... என் காதலியல்ல 😭😭😭😭
மீண்டும் தொலைபேசியுன் நான்.....
Saturday, April 22, 2023
மழையும் கண்ணீரும்!!!
வெளியில் மழை
கண்களில் கண்ணீர்
கண்ணீரையியும்
மழைநீரையும் கூட
கலக்க முடியா
வீட்டுக் கைதி நான்!!!!
Friday, March 10, 2023
மரணத்திடமிருந்து ஒரு அழைப்பு!
உன்னை மகிழ்ச்சியாக
வாழ வைக்க முடியவில்லை!
நீயின்றி வாழ விருப்பமில்லை!
மரணமென்னை விரும்பி அழைக்கிறது!
சென்று விடவா என் உயிரே!!!!
Subscribe to:
Posts (Atom)