Wednesday, January 25, 2023

மரியாதை

முகபுத்தகத்தில் வந்த
பொய் முகத்திற்கு கூட
என் மரியாதை போய்விட்டது!
😢😢😢😢😢

Friday, September 2, 2022

துரோகி

நான் துரோகி தான்.
ஆனால்
நம்பிக்கை துரோகி இல்லை. 

Wednesday, July 13, 2022

கடவுளே காப்பாற்று

 ஏன்?

சரியா?

யார் தவறு?

இருபது வருடங்களின் ஏக்கம். இருவது நொடிகளில் அழித்து விட்டாள்.

என்ன செய்வேன்? எவ்வாறு என்னை மாற்றிக் கொள்வேன்?

மாற்றிக் கொள்ள முடியுமா? கடவுளே...

நான் கூட தவறு செய்ய ஆசைப்படுகிறேன் எனக் கூறி உண்மையாய் இருந்து விட்டேன். ஆனா‌ல் அவள்?   என்னை புரிந்து கொண்டாள் என நான் நம்பிய அவள்? 😭😭😭😭

ஆண்டவா என்னை காப்பாற்று.. காப்பாற்று... 

Monday, April 1, 2019

போதும் மாறிவிடு யென்கிறது  அறிவு .
ஏனோ மாட்டேன் யென்கிறது  மனது .
அறிவுக்கெட்டவில்லை  மனதின்  வலி .

வாய்விட்டு அழுதேன் வலி குறைந்தது.
தொலைத்து விட்ட நம்பிக்கையை
யெவ்வாறு மீட்டெடுப்பேன்?


மஞ்சம் என்னை வெறுக்கிறது.
நான் இரவை வெறுக்கிறேன்.
கண்களோடு தலையணையும்  ஈரம்,

இவை வெறும் புலம்பல்களே!
பொருளை தேடாதே!!
ஏனனில் நான் நானாக இல்லை!!!.


நீ யென் அருகிலிருந்தும்
யேனோ  தனிமையின்  துயரம் .

Sunday, March 24, 2019

உன் நம்பிக்கை
இல்லாமையில்
புதைந்தது
என் நம்பிக்கை  
தலை
முழுகவா
தலையில்
சுமந்து
கொண்டிருக்கிறேன்? 

Saturday, March 23, 2019

அழுகையை எழுதிட
எதேனும் மொழியில்
எழுத்துகள் உண்டோ?