Wednesday, February 8, 2023

உயிரின்றி நான்!!!!

என்னையும் என் உள்ளம், 
உணர்வு,உணர்ச்சிகள் என அனைத்தையும்பகிர்ந்து 
கொள்ளும் ஓர் உயிர் நீ மட்டுமே!

இன்று நானும் என் மனமும்
தனிமையில் தத்தளிக்கின்றோம்
கைக்கு எட்டும் தூரத்தில் நீ
இருந்தும் உள்ளக் குமுறல்களை 
உன்னிடம் சொல்ல முடியவில்லை! 

 உன் காதல் பரிசை 
தொலைத்தேனே ஒழிய
எந்த வேசியிடமும் அடமானம் 
வைக்கவில்லை! 

நான் உன்னிடம் சத்தியவானாய்
வாழ்ந்தேன். ஆனால்
அந்த ஒரு கேள்வியில்
என்னை பொய்யனாக்கி 
உயிருடன் கொன்று விட்டாய்! 

நீயும் உன் நம்பிக்கையும் இன்றி  
இன்று நான் வெரும் பிணமே! 

உடலும் உள்ளமும் சோர்ந்து விட்டது
ஓய்வெடுக்க மனம் 
கல்லறையை தேடுகிறது
அப்பா என்ற ஓசையொ 
என்னை கல்லறைக்கு செல்ல
விடாமல் தடுக்கிறது. 

இறைவா நானும் மனிதன் தானே
ஏன் இப்படி என்னை தினம் தினம்
மரணிக்க செய்கின்றாய்? 
காப்பாற்று இறைவா என்னை காப்பாற்று!!!!!!!!!!!! 
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭



No comments:

Post a Comment