Thursday, December 28, 2023

உண்மையின் வலி!!!!

ஒருவருக்கு உண்மையாய் இருப்பது எங்வளவு கடினம் என்பது உண்மையாய் இருந்து பார்த்தால் மட்டுமே தெரியும்.

உன்னிடம் உன்மையாக இருந்தேன் எதை இழந்தாலும் நீ போதுமென. 

இன்று உன்னையும் இழந்து தனிமரமானதாய் ஒரு விரக்தி!!!

யாரிடம் சொல்லி அழ என் தனிமையை!!!!!

மீண்டும் தனிமையுடம் ஒரு போராட்டம்!!!!! 

Tuesday, December 26, 2023

கனவிலும் நீ...

இன்று லோட்டஸ் மருத்துவமனையில்
நேற்று என் பிரியா மீண்டும் வருவாள் என்ற நம்பிக்கையை முற்றிலும் இழந்தேன். 
நேற்று இரவே வந்தாள் என் கனவில் என் ஆசை மகளுடன் இரு வேறு கனவுகளில். 
முதல் கனவில் என் ஆண்மையின் எழுச்சியை கண்டு ஆறு நாட்களில் எப்படி இந்த மாற்றமெற்று ஆசையாய் வருடினாள். 

இரண்டாம் கனவில் நான் அவளுடைய செல்பேசியில் அழைக்க மறுமுனையில் அவளும் என் மகளும் சேர்ந்து பாடிய பத்தி பாடல் அழைப்பிசையாய்... மெய்மறந்தேன் அன்பே!!!!

=====================================================

 என் காதலின் அர்த்தம்.

நான் இவ்வளவு நாட்களாக சிவப்பு மஞ்சள் பச்சை படம் பார்க்கவில்லை. உன்னோடு நேற்றைக்கு முன் தினம் தான் மருத்துவமனை தொலைக்காட்சியில் பார்த்தேன். 
அதில் சித்தார்த் தான் ஏன் திருமணம் செய்ய விரும்பறேன் என்றொரு காரணத்தை கூறுவார். அதை கேட்ட தருணம் நீ தொலைக்காட்சியை பார்க்க நான் உண்னை பார்த்து அழுதேன்...

அந்த காரணம்:
என் வாழ்க்கையில் யாரை நம்புவது என்று தெரியாது. எனவே நான் முழுவதுமாய் நம்பி என் வாழ்க்கையையும் நிகழ்வுகளையும் தினமு‌ம் 100% பகிர்ந்து கொள்ள ஒரு துணை வேண்டும்.

பிரியா நானும் உன்னை அப்படி என்னித்தானே கரம் பிடித்தேன். என் மனதில் தோன்றிய அனைத்தையும் பகிர்ந்து மகிழ்ந்தேன். ஆனால் இன்று என்னை அனாதையாக விட்டுவிட்டாய்... அதோ இங்கே புலம்பி உள்ள அத்தனையும் உன்னிடம் சொல்லி அழ ஆசை. ஆனால் சில வஞ்சகர்கள் உன்னை என்னிடம் இருந்து பிரித்து விட்டனர். இப்போது உடனிருப்பது என் மனைவி பிரியா... என் காதலியல்ல 😭😭😭😭

  மீண்டும் தொலைபேசியுன் நான்..... 

Saturday, April 22, 2023

மழையும் கண்ணீரும்!!!

வெளியில் மழை
கண்களில் கண்ணீர் 
கண்ணீரையியும்
மழைநீரையும் கூட
கலக்க முடியா 
வீட்டுக் கைதி நான்!!!! 

Friday, March 10, 2023

மரணத்திடமிருந்து ஒரு அழைப்பு!

உன்னை மகிழ்ச்சியாக
வாழ வைக்க முடியவில்லை! 
நீயின்றி வாழ விருப்பமில்லை! 
மரணமென்னை விரும்பி அழைக்கிறது! 
சென்று விடவா என் உயிரே!!!! 

Wednesday, February 8, 2023

உயிரின்றி நான்!!!!

என்னையும் என் உள்ளம், 
உணர்வு,உணர்ச்சிகள் என அனைத்தையும்பகிர்ந்து 
கொள்ளும் ஓர் உயிர் நீ மட்டுமே!

இன்று நானும் என் மனமும்
தனிமையில் தத்தளிக்கின்றோம்
கைக்கு எட்டும் தூரத்தில் நீ
இருந்தும் உள்ளக் குமுறல்களை 
உன்னிடம் சொல்ல முடியவில்லை! 

 உன் காதல் பரிசை 
தொலைத்தேனே ஒழிய
எந்த வேசியிடமும் அடமானம் 
வைக்கவில்லை! 

நான் உன்னிடம் சத்தியவானாய்
வாழ்ந்தேன். ஆனால்
அந்த ஒரு கேள்வியில்
என்னை பொய்யனாக்கி 
உயிருடன் கொன்று விட்டாய்! 

நீயும் உன் நம்பிக்கையும் இன்றி  
இன்று நான் வெரும் பிணமே! 

உடலும் உள்ளமும் சோர்ந்து விட்டது
ஓய்வெடுக்க மனம் 
கல்லறையை தேடுகிறது
அப்பா என்ற ஓசையொ 
என்னை கல்லறைக்கு செல்ல
விடாமல் தடுக்கிறது. 

இறைவா நானும் மனிதன் தானே
ஏன் இப்படி என்னை தினம் தினம்
மரணிக்க செய்கின்றாய்? 
காப்பாற்று இறைவா என்னை காப்பாற்று!!!!!!!!!!!! 
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭



Wednesday, January 25, 2023

மரியாதை

முகபுத்தகத்தில் வந்த
பொய் முகத்திற்கு கூட
என் மரியாதை போய்விட்டது!
😢😢😢😢😢